புலிகளின் அலைவரிசை கோபுரம்: இயங்கு நிலையில்!

ஆசிரியர் - Admin
புலிகளின் அலைவரிசை கோபுரம்: இயங்கு நிலையில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேசத்தில் தமிழீpழ விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற  VHF மற்றும் UHF அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவத்தினர், இந்த தொலைகாட்சி அலைவரிசை கோபுரத்தையும் கைப்பற்றியிருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் குறித்த அலைவரிசை கோபுரம் தற்போதும் இயங்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.