பாலியல் குற்றவாளிகளுக்கு இனி ஆண்மை நீக்க தண்டனை!!
பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனைக்கு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கு பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.