கொரோனா தடுப்பூசி போடப்போகிறீர்களா? “தடுப்பூசி சுற்றுலா” அமெரிக்க செல்ல வாய்ப்பு!!
அமெரிக்கா சென்று கொரோனா வைரசுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள “கொரோனா தடுப்பூசி சுற்றுலா” திட்டம் ஒன்றை ட்ரவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, டிசம்பர் 13 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த சுற்றுலா ட்ரவல்ஸ் நிறுவனம் ஒன்று இந்தியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்புவோருக்கு “தடுப்பூசி சுற்றுலா” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க அமெரிக்காவுக்கு 1.75 இலட்சம் ரூபா மதிப்புள்ள 4 நாள் சுற்றுப்பயண திட்டத்தை கொரோனா வைரஸ் தடுப்பூசியை மைய கருப்பொருளாக கொண்டு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.