யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பெண்களுக்கு எதிரான 1011 வன்முறைகள் பதிவு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சுஜித்குமார் லேணுகா ராணி கூறியுள்ளார். 

பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்க்கையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இருந்து 

1076 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டு இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 

1011 பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் யாழ்.மாவட்டத்தில் 

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. வீட்டு வன்முறை, திருமணத்துக்கு முன், திருமணத்துக்குபின்னரான வன்முறைச் சம்பவங்களே முறைப்பாடுகளாக 

பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறான முறைப்பாடுகள் உரிய சட்ட நடைமுறைகளின் பிரகாரம் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் விசாரணை செய்யப்பட்டு 

அப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன, என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு