SuperTopAds

மாவட்டத்திற்குள் நுழையும் யாசகர்களை மடக்கி பிடிப்பதற்காக பொலிஸார், படையினர், சுகாதார பிரிவு கூட்டிணைவு..!

ஆசிரியர் - Editor I

மகியங்கணை பகுதியிலிருந்து வாராந்தம் வியாழக்கிழமைகளில் மன்னார் மாவட்டத்திற்குள் நுழையும் யாசகர்களை படையினர் மற்றும் பொலிஸார் உதவியுடன் மடக்கி பிடிப்பதற்கு மாவட்ட மட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் மன்னார் மாவட்ட செயலர் தலமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொியவருவதாவது, மன்னார் மாவட்டத்திற்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் மகியங்கனையில் இருந்து 

சுமார் 40ற்கும் மேற்பட்ட யாசகர்கள் காலையில் வந்திறங்கி சகல வர்த்தக நிலையங்களிற்கும் சென்று யாசகம் எடுகின்றனர். என சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கொரோனா அச்சம் குறைவடையும் வரையில் இச் செயலை தடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வாறு தடுப்பதற்காக வியாழக்கிழை சுகாதார அதிகாரிகள், பொலிசார், படையினரின் உதவியினையும் நாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் சுகாதாரத் திணைக்களத்தினர், பொலிசார், பிரதேச செயலாளர்கள், 

படையினர் என சகல தரப்பினரும் பங்கு கொண்டிருந்தனர்.