அமெரிக்காவில் முறையான அதிகார மாற்றம்!! -சம்மதம் வெளியிட்ட ட்ரம்ப்-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் பதவியேற்பதற்கான முறையான அதிகார மாற்றத்தைச் செய்ய தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்துள்ளார் என்று அறிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தனது தோல்வியை இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளாதபோதும் அதிகார மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை பொதுச் சேவை நிர்வாகம் (GSA) செய்யத் தொடங்கலாம் என தனது ருவிட்டரில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொதுச் சேவை நிர்வாகம் வெற்றியாளராக பைடனை ஒப்புக்கொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து ட்ரம்ப் அதிகார மாற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தில் பைடன் வெற்றி பெற்றதாக உத்தியோகபூர்வமாக சான்றளிக்கப்பட்டதை அடுத்து அதிகார மாற்றத்துக்குச் சம்மதம் தெரிவிக்கும் கருத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.