தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்!! -டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்-

ஆசிரியர் - Editor II
தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்!! -டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சந்தித்த தோல்வியை பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அங்கு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக தேர்வானார். ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து ஜனாதிபதி டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் கட்சியில் உள்ள முக்கிய  நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு