SuperTopAds

ட்ரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
ட்ரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா!!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் (வயது-42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் ட்ரம்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், டொனால்டு ட்ரம்ப் ஜூனியருக்கு இந்த வாரம் தொடக்கத்தில் நடாத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

ஜூனியர் ட்ரம்புக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடித்து தனிமையில் இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.