ஜி-20 மாநாட்டை புறக்கணித்து மைதானத்தில் விளையாடிய ட்ரம்ப்!!
ஜி-20 நாடுகள் மாநாடு ஆரம்பித்த நேரம் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கொரோனா குறித்த ஆலோசனையின் போது அதனை புறக்கணித்து விட்டு மைதானத்தில் விளையாடி பொழுதை கழித்துள்ளார்.
15ஆவது ஜி-20 நாடுகள் மாநாட்டை இந்த முறை சவுதி அரேபியா நடத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை மாநாடு காணொலி ஊடாகவே நடத்தப்படுகின்றது. இரு நாட்கள் நடாத்தப்பட்ட மாநாட்டில் முதல்நாள் 20 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
எனினும் மாநாட்டின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட ட்ரம்ப் 13 நிமிடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதன்பின் கொரோனா வைரஸ் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு சென்று விட்டார். அதன்பின் காணொலியில் ட்ரம்ப் வரவில்லை.
ஆனால் சிறிது நேரத்தில் வாஷிங்டன் நகருக்கு புறநகரில் இருக்கும் கோல்ப் கிளப்பில் உள்ள மைதானத்தில் ட்ரம்ப் கோல்ப் விளையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.