யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மக்களுக்கு அவசர எச்சரிக்கை தாழமுக்கம் “நிவாட்” புயலாக மாறுகிறது..! காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றருக்கும் அதிகம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணத்திலிருந்து 638 கிலோ மீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் தழமுக்கம் ஒரு புயலாக வலுப்பெற தேவையான அத்தனை ஏதுக்களையும் பெற்றிருக்கும் நிலையில் புயலாக மாறும் வாய்ப்புக்கள் பெரும்பாலும் உள்ளதாக யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, குறித்த தாழமுக்கம் புயலாக மாறினால் அதற்கு “நிவார்” என்ற பெயர் வழங்கப்படும். எனவும் அந்த பெயரை ஈரான் நாடு இட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தாழமுக்கம் வேமாக நகர்ந்து வரும் நிலையில் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அதன் தாக்கத்தை உணரலாம்

எனவும் கூறியுள்ளார். மேலும் குறித்த தாழமுக்கம் 23ம் திகதி இரவு புல்மோட்டைக்கு நேராக தரைப்பகுதியை நோக்கி நகர்ந்து 24ம் திகதி முல்லைத்தீவின் கரையோரபகுதிக்கு சமாந்தரமாக வடமராட்சி கிழக்கு (24 &25. 11.2020)வரை நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்கின்றது.

இன்றைய (22.11.2020 10.30 மு.ப.) நிலையில் திருகோணமலை, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கரையோரப்பகுதிகளில் கன மழையும் கடும் காற்றும் வீசக் கூடும். முல்லைத்தீவுக்கு 160 மி.மீ. க்கு கூடுதலாகவும், வடமராட்சி கிழக்கிற்கு 145 மி.மீ. க்கு கூடுதலாகவும் 

கிளிநொச்சிக்கு 115 மி.மீ. க்கு அண்மித்தும் மழை கிடைக்க வாய்ப்புண்டு. (தாழமுக்க விருத்திக்கேற்ப இவை மாற்றமடையலாம்). அதே சமயம் எதிர்வரும் 24.11.2020 இல் முல்லைத்தீவில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை விட கூடுதலாகவும், 24,25 &26 11.2020 களில் சாளை, சுண்டிக்குளம், 

வடமராட்சி கிழக்கு மற்றும் பருத்திதுறை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீச வாய்ப்புண்டு. வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இக்காலப்பகுதியில் கன மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும்.

எனவே முன்னெச்சரிக்கையாக எங்கள் வீடுகளுக்கு அண்மித்துக் காணப்படும் கடும் காற்றினால் பாதிக்கப்படும் மரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம். என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு