தொற்றுநோயியல் வைத்தியசாலையிலிருந்து குழந்தையுடன் தப்பி ஓடி தலைமறைவான பெண் சிக்கினார்..! சிகிச்சைக்கு பின் சட்டம் தன் கடமையை செய்யும்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து 2 வயது குழந்தையுடன் தப்பி ஓடி தலைமறைவான பெண் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

25 வயதான குறித்த பெண்ணுக்கும் அவருடைய 2 வயதான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 

தனது குழந்தையுடன் தப்பி ஓடிய பெண் பேருந்தில் தனது சொந்த ஊருக்கு சென்று உறவினர் வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவானார். இந்நிலையில் நாடு முழுவதும் பொலிஸார் தேடிவந்ததுடன், 

விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுகளையும் தேடுதலில் ஈடுபடுத்தியதுடன், பெண்ணின் புகைப்படத்துடன் பொதுமக்களின் உதவியினையும் பொலிஸார் கோரியிருந்த நிலையில் நேற்றுமாலை எஹெலியகொட - சிதுரலங்காவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

Radio