யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையின் பின்புறமாக மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுகிறதா..? காணொளி வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பின்புறமாக மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுவதுடன், எரியூட்டும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.தென்மராட்சி பகுதியில் அமைந்துள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேருகின்ற மருத்துவக் கழிவுகளை இவ்வாறு வைத்தியசாலையின் பின்புறப் பகுதியில் எரியூட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானத்தில் கொட்டப் பட்ட சம்பவம் இடம் பெற்று சர்ச்சைகளை உண்டுபண்ணிய நிலையில் 

குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Radio