குடும்ப பெண்ணால் வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்..! குடும்ப பெண் பொலிஸ் நிலையத்தில் சரண், முள்ளியவளையில் சம்பவம்..
குடும்பஸ்த்தர் ஒருவரை வெட்டி கொலை செய்த குடும்ப பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருக்கிருக்கின்றார்.
இந்த சம்பவம் நேற்றிரவு முல்லைத்தீவு முள்ளியவளை - முறிப்பு கிராமத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் ஜெயமோகன் நிரோஸன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குடும்ப பெண் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவரின் தலையில் இரு வெட்டு காயங்களுடன் காணப்படுகின்றன.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.