SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டரை வயது குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய தாய்..! குழந்தை மீட்பு, தாய் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டரை வயது குழந்தையுடன் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி சென்ற தாய் தலைமறைவாகியுள்ள நிலையில், குழந்தை மீட்கப்பட்டுள்ளபோதும் தாய் தேடப்பட்டு வருகின்றார். 

தொற்றுக்குள்ளான குழந்தை எஹெலியகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தாயினால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் 25 வயதான தாய் தலைமறைவாகியுள்ளார். 

இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.