SuperTopAds

95 வீதம் கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி!! -விரைவில் மக்கள் பாவனைக்கு-

ஆசிரியர் - Editor III
95 வீதம் கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி!! -விரைவில் மக்கள் பாவனைக்கு-

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து 95 சதவீதம் பயனளிப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து,  இறுதி கட்ட  பகுப்பாய்வு தரவுகளின்  படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது என்று மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாகவும் மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததில் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய பைசர் நிறுவனம் வயதானவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும், தீவிர பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றும்  மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.