சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய கருப்பான துவாரம் !
சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய கறுப்பான துவாரம் ஏற்பட்டுள்ளதாக, நாசா சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8-ம் திகதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில், அந்த புற ஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கறுப்பாக மிகப்பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று வெளியேறுவது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இந்த துவாரம் வழியாக அதிவேகத்தில் சூரியக்காற்று வெளியேறி வருகிறது.
சூரியனில் ஏற்படும் அகலமான துவாரம் 'கரோனா' என அழைக்கப்படுகிறது. சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த துவாரங்கள் ஏற்படுகிறது.
வழக்கமான சூரியகாற்றை விட இந்த துவாரத்திலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
இந்த அதிவேக ஒளிக்கற்றை பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும் சூரிய மின்சக்தி கருவிகளும் பாதிப்படைகின்றன.
சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா துவாரங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.