கனடாவை உலுக்கும் கொரோனா!! -தொற்று நோயாளர் தொகை 300,000 ஐ கடந்தது-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் தாண்டியுள்ளது.
அத்துடன் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11,007 ஆக அதிகரித்துள்ளது என்று அறிய முடிகின்றது.
நாட்டில் கடந்த நவம்பர் 6 முதல் தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரியாக 4,000 க்கும் அதிகமாகப் பதிவாகி வருவதாக கனடிய மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.