மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ்தேசியவாதிகள், குதுகலிக்கபோகும் தென்னிலங்கை..

ஆசிரியர் - Editor I

தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் மாவீரர் நாள் நினைவுகூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், 

அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

இதேவேளை துப்பரவு பணிகளுக்கான முயற்சியை தொடர்ந்து தடை உத்தரவினை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த துப்புரவு பணிகள் அவசர அவசரமாக இப்போது தேவையா? மாவீரர் நாளுக்கு நெருக்கமாக இதனை மேற்கொண்டிருக்க கூடாதா?

என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்திற்கு உசுப்பேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கிறார்களா? எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டது. 

அது தொிந்திருந்தும் மாவீரர் நாளுக்கு இடையில் 11 நாட்கள் உள்ள நிலையில் 27ம் திகதிக்கு நெருக்கமாக இந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டிருக்க கூடாதா? எனவும், தற்போது பொலிஸாரை விழிப்படைய செய்துள்ளதால் வெறுமனே கோப்பாய், கனகபுரம் மட்டுமல்லாமல்

வடகிழக்கு முழுவதும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடைவிதிக்கப்படும் அபாயத்தை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கி விட்டிருப்பதாக விமர்சனங்கள் கூறப்படுகின்றன. தியாகி திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்லாமல், செஞ்சோலை படுகொலை நினைவேந்தலும் நிறுத்தப்பட்டது. 

குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி விசுவமடுவில் அந்த நினைவேந்தலை நடத்தாமல் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்த நிலையில் தற்போது இந்த முந்திரிக்கொட்டை வேலையினால் மாவீரர்நாள் நினைவேந்தலையும் முற்றவெளியில் நடத்தும் நிலை வரப்போகிறதா? என்ற விமர்சனங்களும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு