யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி..! எந்தவொரு பாதுகாப்பும் இல்லை, மருத்துவர்கள், தாதியர்கள் கடும் விசனம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவர் சுகயீனமடைந்த நிலையில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் வைத்தியர்கள், ஊழியர்கள் கடும் கோபமடைந்திருக்கின்றனர். 

போதனா வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் போன்று எந்தவொரு பாதுகாப்பும் இன்று கொரோனா நோயாளியை அனுமதித்து சிகிச்சையின் பின்பு மீண்டும் கொரோனா வைத்தியசாலைக்கே மாற்றப்பட்டதால் வை்தியர்கள் , தாதியர்கள் நிர்வாகத்தின் தவறுதான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

எந்த நோயாளியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா நோயாளர் எனில் அதற்கான தனியான விடுதி வசதி உண்டு எனப் பதிலளித்தார். இவ்வாறு மாறுபட்ட கருத்து வருவது தொடர்பில். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணப் பிரதிநிதித்துவம் செய்யும்ம் மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது , ஒரு கொரோனா வைத்தியசாலை ஏற்படுத்தினால் அங்கே அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களிற்கு 

பிற நோய் ஏதாவது ஏற்படுமாயின் அதற்கான ஏற்பாட்டினையும் சம நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் கோப்பாய் , மருதங்கேணியில் இரு கொரோனா வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அங்கே அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்கு மூச்சுத் திணறலோ அல்லது பிறசர், சிறுநீரக நோய் ஏதாவது ஏற்பட்டாள் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாட்டை செய்நாதமை ஓர் திட்டமிடப்படாத செயல். 

இதுதான் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிக்கும் ஏற்பட்டது. அவரை தனியான இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதித்து வைத்தியர்கள் , தாதியர்கள் மிக சிரமத்தின் மத்தியில் சிகி்ச்சை அளிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தவறான ஒரு செயல்பாடு என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு