இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!!

ஆசிரியர் - Editor III
இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!!

ஜ.பி.எல் தொடரை முடித்துக் கொண்டு துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

கடந்த 11 ஆம் திகதி துபாயில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர். ஒயிட் பால் கிரிக்கெட் அணி மற்றும் டெஸ்ட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என 25 பேர் நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

சிட்னி சென்றடைந்ததும் இந்திய அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தனிமையில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் கோரன்டைனில் சரியான துணை என டுவிட்டரில் பதிவிட்டு, நானேதான் கம்பெனி எனத் தெரிவித்துள்ளார்.

Radio