SuperTopAds

நாட்டு மக்கள் வறுமையில் தவிப்பு!! -நாயின் 19 அடி தங்க சிலையை திறந்துவைத்து மகிழ்ந்த ஜனாதிபதி-

ஆசிரியர் - Editor III

நாட்டு மக்கள் வறுமையில் வாட துருக்மெனிஸ்தான் அதிபர் 19 அடி தங்க சிலையை திறந்துவைத்து உள்ளார்.

துருக்மெனிஸ்தான் நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடி வருகின்ற நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி நாய் ஒன்றின் 19 அடி தங்க சிலையை திறந்து வைத்துள்ளார்.

குறித்த சிலையில் உள்ள நாய் அலாபை எனும் இனத்தை சேர்ந்த நாய்; துருக்மெனிஸ்தான் ஜனாதிபதி குர்பங்குலிக்கு விருப்பமான நாய் இனமாக இருந்தது.

மத்திய ஆசியாவில் மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.

அந்நாட்டின் ஜனாதிபதியால் அந்நாய் இனம் அங்கீகரிக்கப்படுவது, கொண்டாடப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை அர்ப்பணித்துள்ளார் குர்பங்குலி.

அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த சிலையினைச் சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க நாயின் சிலையை வடிவமைக்க உண்டான செலவு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.