யாழ்.நெடுந்தீவு 14 நாட்களாக முடக்கலில், படகு சேவையும் நிறுத்தம்..! முடக்கப்பட்டதுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நெடுந்தீவு கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டு படகு சேவையும் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த முடக்கத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை. என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இவ் முடக்கம் COVID-19 தொற்றுக் காரணமாக ஊர் மட்ட அமைப்புக்கள் எடுத்த முடிவின் பிரகாரம் முடக்கப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி தெரிவித்தார். இதனால் இப் பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக வங்கி இயங்காமையினால் நகைகளைக் கூட அடகு வைக்க முடியாதுள்ளதாக மக்கள் குற்றச் சாட்டுகின்றனர். இது தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அரச அதிபரிடம் கேட்ட போது SLT தொலைத் தொடர்பு இணைய வழியில் கோளாறு காரணமாக 

வங்கியை இயக்க முடியவில்லையாம், குறித்த இணைய தொடர்புகள் கடற்ப்படையின் அலைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் MOD அனுமதி எடுப்பதில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு