யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள்!! -யாழ்.வீரர்களுக்கு களம் கிடைக்குமா-

ஆசிரியர் - Editor III

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) 20-20 கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் விளையாடவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சோயிப் மாலிக் – பாகிஸ்தான், உஸ்மான் ஷின்வாரி – பாகிஸ்தான், கைல் அபோட் – தென்னாப்பிரிக்கா, டுவான் ஒலிவர் – தென்னாப்பிரிக்கா, ரவி போபரா – இங்கிலாந்து, ரொம் மூர்ஸ் –இங்கிலாந்து ஆகிய சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்களே யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலின கண்டாம்பி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய வீரர் ஹேமங் பதானி துணைப் பயிற்சியாளராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio