மியன்மாரில் ஆங் சான் சூசி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு!! -ஆதரவாளர்கள் இறுதி முடிவு அறிவிக்கும் முன்னே கொண்டாட்டத்தில்-
மியன்மாரில் நேற்று நடந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் மிக துரித கதிவியில் இடம்பெற்று வரும் நிலைியல் தேர்தலில் ஆங் சான் சூசி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் பல நூறு தீவிர ஆதரவாளர்கள் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக்கின் யாங்கோன் தலைமையகத்திற்கு வெளியே இன்று திங்கட்கிழமை காலை முதல் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் முழுமையான தேர்தல் முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.