SuperTopAds

பைடன்-ஹாரிஸ் கோவிட் திட்டம் விரைவில் அறிமுகம்!! -அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
பைடன்-ஹாரிஸ் கோவிட் திட்டம் விரைவில் அறிமுகம்!! -அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு-

ஒட்டுமொத்த அமெரிக்கா மக்களும் அநீதிக்கு எதிராக ஒருமித்து நிற்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவை மீட்டெடுப்பேன் என்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜே பைடன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் டெலாவேரின் -வில்மிங்டனில் உள்ள தனது பிரச்சார தலைமையகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே பைடன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். இதே வேளை உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.

புதிய அரசு அமைந்தவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்படும். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதே நாங்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப ஒரே வழி.பைடன்-ஹாரிஸ் கோவிட் திட்டத்தை செயற்படுத்த ஏதுவாக திங்கட்கிழமை முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய இடைக்கால ஆலோசகர் குழுவை அறிவிக்கவுள்ளோம் என்றார்.