SuperTopAds

ஜனாதிபதியாகவுள்ள ஜோ பிடனுக்கு உயிர் அச்சுறுத்தலா? -திடீரென அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு-

ஆசிரியர் - Editor III

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன்முன்னிலையில் உள்ள நிலையில் இன்று முதல் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரகசிய சேவையினர் ஈடுபடவுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

இன்று டெலவெயர் மாகாணத்தில் பிடன் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவரது பிரச்சாரக் குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இரகசிய சேவை முகவர்களை அவரது பாதுகாப்பு பணியில் கூடுதலாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்க இரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் கத்தரின் மில்ஹோன் மறுத்துவிட்டார். முக்கிய நபர்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரகசிய சேவை அமைப்பு கருத்து வெளியிடுவதில்லை என்று அவர் கூறியதாகவும் வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.