SuperTopAds

வாக்கு எண்ணுவதை நிறுத்தக் கோரிய ட்ரம்பின் வழக்கு நிராகரிப்பு!! -சற்று முன் அதிரடி தீர்பளித்த நீதிமன்றம்-

ஆசிரியர் - Editor III

வாக்கு எண்ணிக்கு எண்ணும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரச்சாரக் குழு முன்வைத்த கோரிக்கையை பென்சில்வேனிய நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று டிரம்ப் தரப்பு சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்த பென்சில்வேனியா நீதிபதி, குடியரசு கட்சியினர் மட்டுமின்றி ஜனநாயக கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை பகுதிக்குள் நுழையவில்லை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியின் விளிம்பில் ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளார். இந்நிலையில் இறுதி முயற்சியாக சட்டப் போராட்த்தை ட்ரம்ப் தரப்பு கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் அந்த முயற்சிக்கும் பென்சில்வேனிய நீதிமன்றம் ஊடாக தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.