SuperTopAds

அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஜோ பிடன்!!

ஆசிரியர் - Editor III
அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஜோ பிடன்!!

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களான மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகியவற்றை தனது கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில் தங்களின் வெற்றி உறுதியாகியுள்ளதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இதுவரை வெற்றிபெறத் தேவையான 270 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 243 உறுப்பினர்களை பிடன் வென்றுள்ளார். மேலும் சில மாகாணங்களில் பிடன் முன்னணியில் உள்ளார். ட்ரம்ப் 214 உறுப்பினர்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனால் வெள்ளை மாளிகைக்குச் செல்லப் போதிய இடங்கள் தங்களுக்கு உள்ளதாக பிடன் கூறியுள்ளார்.

பிடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டபோதும் இறுதி வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும்வரை அவசரப்பட்டு வெற்றி பெற்றதாகத் தான் அறிவிக்கப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.