யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது...! 800 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில், முதற்கட்டமாக 7 மில்லியன் நிதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் 800 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

தற்போதுவரை 16 பேர் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், அபாய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என 

800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு 7 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக கிடைத்திருக்கின்றது. 

அதனை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர்கள் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு குறித்த உணவு விநியோகம் நடைபெற்றுவருகின்றது. 

மேலும் மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் பொறுப்பற்றிருப்பதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. அது ஆபத்தான ஒரு நிலமையாகும். 

மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு