பிடனுக்கு வாக்களிக்கும் ட்ரம்ப் கட்சி முக்கியஸ்த்தர்!! -அமெரிக்காவின் நன்மைக்காக வக்களித்ததாகப் ருவிட்டர் பதிவு-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியின் தேசியக் குழு முன்னாள் தகவல் தொடர்பு பணிப்பாளர் ரியான் மஹோனி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கே வாக்களித்ததாக தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கட்சிக்காகவன்றி அமெரிக்காவின் நன்மை கருதி பிடனுக்கு வாக்களித்ததில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாக்குச் சீட்டையும் ருவிட்டரில் பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் 2017 முதல் 2019 வரை குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தகவல் தொடர்பு பணிப்பாளர் ரியான் மஹோனி இருந்தவராவார்.