உலக சுகாதார அமைப்பு தலைவருக்கு கொரோனா!! -வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்-
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்புகொண்டிருந்தமையை அடுத்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இத்தகவலை அவர் தன்னுடைய ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நான் நலமாக இருக்கிறேன். எனக்கு தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அங்கிருந்து பணிகளைச் செய்கிறேன் எனவும் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.