திருநெல்வேலி சந்தை, கொக்குவில் சந்தை ஆகியவற்றை மூடும் நிலை உருவாகும்..! சுகாதார நடைமுறைகள் உதாசீனம் செய்யப்படும் நிலையில் தவிசாளர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
திருநெல்வேலி சந்தை, கொக்குவில் சந்தை ஆகியவற்றை மூடும் நிலை உருவாகும்..! சுகாதார நடைமுறைகள் உதாசீனம் செய்யப்படும் நிலையில் தவிசாளர் எச்சரிக்கை..

சுகாதார நடைமுறைகளை மீறி தொடர்ந்தும் அசண்டையீனமாக நடந்துகொண்டால் திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகள் பூட்டப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் த.தியாகமூர்த்தி கூறியுள்ளார். 

கொரோனா அச்சம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

குறித்த சந்தைகளுக்கு தினமும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக 

எமது ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறுகோரி 

வருவதுடன் எமது சபையின் உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.இருந்த போதிலும் பெருமளவான வியாபரிகள், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் விதிகளை மீறி 

செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன. தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் வியாபாரிகள், 

பொதுமக்கள் ஈடுபட்டால் எமது ஆளுகைக்குள் உள்ள திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை என்பவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு