தொடரும் கொரோனா தாண்டவம்!! -ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
தொடரும் கொரோனா தாண்டவம்!! -ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு தொற்று-

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் உலக அளவில் 20 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.78 இலட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,178,527 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 44,739,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,706,005 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,191 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 35 சதவிகிதம் அளவிற்கு அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு