வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் ஊரடங்கா..? பொலிஸ் ஊடக பிரிவு நிராகரிப்பு..
கொழும்பு - வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடக பிரிவு நிராகரித்துள்ளது.
நாட்டில் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் சில பகுதிகள் உள்பட 51 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.