SuperTopAds

வைத்தியசாலை பெண் ஊழியருக்கும், கணவருக்கும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கும் 13 வயது மகளுக்கும் கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I

குருணாகல் போதனா வைத்தியசாலையில் தலசீமியா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதனை தற்காலிகமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இவரது கணவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த வைத்தியசாலையில் நடத்திய சோதனையில் குலியாபிட்டியைச் சேர்ந்த 40 வயது பெண்ணும், அவரது 13 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலசீமியா சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் இன்று காலை முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,

மேலும் சகல ஊழியர்களையும், சிகிச்சை பெறும் நோயாளிகளையும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.