1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு 34818 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 34 ஆயிரத்து 818 பேருக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
நியமனம் பெறுபவர்கள் தங்கள் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட 25 பகுதிகளில் ஆறு மாத முறையான பயிற்சி பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுபயிற்சி திட்டத்தின் பொறுப்பில்
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழு உள்ளது.பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு NVQ III தர சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பயிற்சியாளருக்கு பயிற்சி காலத்தில் மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.