க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..! 3 மாணவர்கள் உண்மையை மறைத்து பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதியுள்ளனர்..

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுடன் பரீட்சையில் தோற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கல்வி வலயத்தில் உள்ள மூன்று தேர்வு மையங்களில் அவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில், இரண்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தேர்வு எழுதினர்,
மற்ற மூன்று மாணவர்களும் தொற்று உண்மையை மறைத்து, சில நாட்கள் தேர்வு எழுதியுள்ளளமை அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த மாணவர்கள் அனைவரும்
கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு மீதமுள்ள தேர்வில் தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் பழகிய அனைத்து நண்பர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.