அடுத்துவரும் வாரம் மிக முக்கியமானது..! மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவர், 16 மாவட்டங்களில் பாதிப்பு, இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் மிக முக்கியமானது. என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த கொரேனா நோயாளிகள் 16 மாவட்டங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், 

இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளவர் அதனை மறைத்து இருக்கும் குழுவினர் இருந்தால், அவை அடுத்த வாரம் தொற்று உறுதியாகலாம் என்று அவர் கூறினார்.

கொழும்பு துறைமுக கப்பல்துறை நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

Radio