அச்சுறுத்தும் கொரோனா..! 49 படுக்கைகள் மட்டுமே மீதமாக உள்ளனவாம், இன்று மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் 49 படுககைகள் மட்டுமே மீதமாக உள்ளதென கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தொிவித்திருக்கின்றது. 

மேலும் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் இதுவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் நிலையம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு 

சிகிச்சை அளிப்பதற்கான திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிலையம் கூறுகின்றது. இதேவேளை மினுவாங்கொட கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார். 

இந்நிலையில் மினுவாங்கொடை தொற்று இதுவரை 2,036 ஆக உயர்ந்துள்ளது. குலியாப்பிட்டியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் கயலா, உருபிட்டி, அண்ணாருவ, பல்லேவேல ஆகிய 4 கிராமங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆம் திகதி தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Radio