மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கியது அரசு..!

ஆசிரியர் - Editor I

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு