யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றும் இரு கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று..! மேலும் இருவர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரு கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சிப்பாய்களுக்கு நேற்றய தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை இராணுவ தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கடற்படை சிப்பாய்களுடன் பணியாற்றிய இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Radio