யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணனை நீக்ககோரும் மனு மீளபெறப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்டளை வழங்குமாறுகோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீள கையேற்கப்பட்டிருக்கின்றது. 

பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவருடைய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதனால் வழக்குச் செலவு இன்றி மனுவை மீளப்பெற மனுதாரர் முடிவு செய்துள்ளார். 

என்று மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார். மணிவண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விடயத்தை நான் அறியவில்லை. ஆனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையில்லை. என்று மணிவண்ணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார். 

அதனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு அனுமதியளித்தது. யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். 

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து 

அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். மனு தாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடையும்வரை 

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஓகஸ்டில் வழங்கியது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது 

அதனை மனுதாரர் மீளப்பெற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்து சட்டத்தரணி வி.மணிவண்ணனின் மாநகர சபை உறுப்புரிமையை நீக்காவின் அவர் அந்தப் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு