நாட்டில் மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி..! மின்சாரசபை ஊழியர்கள் 12 பேருக்கு தொற்று, வங்கி ஊழியருக்கு தொற்று, அச்சுறுத்தும் கொரோனா..
ஹம்பா - மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், 14 பேர் ஆடை தெழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என இராணுவ தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை கொழும்பு Marine Drive உள்ள NDB வங்கி கிளையின் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
NDB கிளையில் வேலை செய்ய குறித்த ஊழியர் மினுவங்கொடவில் இருந்து வந்ததாக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்கொழும்பு Ave Maria வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனை பெரியமுல்ல பகதி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள் மீதும்
பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்நிலையில் ஒக்டோபர் 6 முதல் 9 வரை மருத்துவமனைக்குச் சென்றவர்களுக்கு மீது பி.சி.ஆர்
பரிசோதனைகள் விரைவில் சுகாதார அதிகாரிகளால் நடத்தப்படும் என தெரிவி்கப்பட்டுள்ளது. மேலும் கந்தானை மின்சாரசபையின் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் ஊழியர் ஒருவரின் மகள் மினுவங்கொ பிராண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார், அவர் ஊழியர் தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த காரணத்திற்காக, மற்ற ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவை பொருட்கள் பரிமாற்று பிரிவில் cargo division கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில் Export Building ஏற்றுமதி பிரிவில் Building No. 4 Terminal இல் கடமையாற்றும் ஊழியர் ஆவார்.