முல்லைத்தீவில் நாளை மறுநாள் போராட்டத்துக்கு அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு ஆண்டு நிறைவடையவுள்ளது.
இதனை முன்னிட்டு நடத்தப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.