பிரித்தானியவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கவுள்ள போரிஸ் ஜோன்சன்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய அறிக்கை ஒன்றை பிரதமர் அமைச்சர்களுக்கு அனுப்ப உள்ளார்.
தொற்றுக்களின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று படிமுறை முறைமையுடன் புதிய கட்டுப்பாடுகள் அமையும்.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் மதுபானசாலைகள் உணவகங்கள் என்பன வட இங்கிலாந்து மற்றும் மிட்லேண்ட்ஸ் பகுதிகளில் மூடப்படும்.குறித்த பகுதிகளிலேயே அதிகளவான தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மூன்று முறைமைகளாக அமுல்படுத்தப்படும் கட்டுப்பாடுகளை உள்ளுர் தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.
ஒவ்வொரு முறைமையும் தொற்று மட்டத்தை உள்ளிடக்கியிருக்கும்.இந்த நிலையில் கட்டுப்பாடுகளின் தன்மை குறித்து இவ்வார இறுதியில் விவாதத்திற்கு உட்பட்டது.
நாட்டின் பல பாகங்களில் தொற்றுக்கள் அதிகரித்துள்ள நிலையில் வெகு விரைவில் இந்த கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்படும் என N டாவிங் ஸ்ரீட் அலுவலகத்தின் ஆலோசகர் சேர் எட்வர்ட் அமைச்சர்களுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போதைய இக்கட்டான தெரிவுகளுக்கு மத்தியில் இந்த கட்டுப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.