பல்கலைகழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..! விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீட 3ம் வருட மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று மாணவிக்கு மேற்கொள்ளபட்ட பி.சி.ஆர் சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து இன்று குறித்த மாணவி தங்கியிருந்த அறையில் உள்ள மாணவர்களுக்கும்,
அவரது நண்பர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை நாளை நடத்துமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளார். தங்குமிடங்களில் தங்கியுள்ள மாணவர்கள் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.