சுகாதார நடைமுறை பின்பற்றப்படவில்லையா? நோய் அறிகுறிகள் தொிந்தும் விடுமுறை வழங்கவில்லையா? “பிறாண்டிக்ஸ்” ஆடை தொழிற்சாலை மீது பாய்கிறது விசாரணை குழு..!
ஹம்பா - மினுவாங்கொட பகுதியில் உள்ள பிறாண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவிய விதம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தொழில் அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா தொழில் ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியிருக்கின்றார்.
குறித்த தொழிற்சாலையில் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகிறது. அதேபோல வைரசிற்கான அறிகுறி இருந்தும் தொழிலிலுக்கு திரும்புமாறு சில ஊழியர்களை அந்த நிறுவன முகாமை அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார்.