வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு

ஆசிரியர் - Admin
வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு

அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O) நியமனம் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் எதிர்வரும்  மார்ச் 14ம் திகதி

காலை 10க்கு கொழும்பில் தேசிய கொள்கைகள்மற்றும்   பொருளாதார அமைச்சின் முன்னால் நடைபெற உள்ளதாக  ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இது தொடர்பாக விண்ணப்பித்த அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் இக்கலந்துரையாடலில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அச்சங்கம் பட்டதாரிகள் அனைவரையும் கேட்டுள்ளது.

மேலதிக தொடர்பிற்கு  0713533827 0773344611

அத்துடன்    குறித்த     அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைந்து பெற ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினால்  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ( கொழும்பில்) முன் இடம்பெறவுள்ள குறித்த  கலந்துரையாடலில் வடக்கு மாகாண அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

மேலும் இக் கலந்துரையாடலில் அனைத்து பட்டதாரிகளின் கையெழுத்து உள்ளடங்கிய மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளது என  வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

இது தவிர கலந்து கொள்பவர்கள் உங்கள் மாவட்ட- ஆண்டு பிரதிநிதிகள் ஊடாக உங்கள் வரவை உறுதிபடுத்துங்கள். மாவட்ட-ஆண்டு பிரதிநிதிகள் தலைவர் ப.கிரிசாந்தனிடம் உங்கள் வரவுத் தகவலை பங்குனி 10 ஆம் திகதி முன் வழங்குதல் வேண்டும்.

எமக்கான அரச நியமனங்களுக்காக அரசு ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. இவ் அவகாசம் மூன்று வருடமாக தொடர்ந்தவண்ணம் உள்ளது.

எனவே எமது அரச நியமனங்களை கால அவகாசங்களால் அலட்சியப்படுத்தாது விரைந்து தருமாறு கோரி இவ் கலந்துரையாடல் நிகழ்கிறது. அனைவரும் உங்கள் தொழில் உரிமையை பெற கலந்து கொள்ளுங்கள் என அச்சமூகம் கேட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு