இந்தியாவைபோல் மோசமான நிலமை இலங்கையிலும் உருவாகும் சாத்தியம்..! பொதுமக்களும், அரசும் அவதானமாக இருக்கவேண்டும்..
இந்தியாவில் கொரோனா தாண்டவமாடும் நிலையில் இலங்கையில் கொரோனா அபாயம் இல்லை. என கூறமுடியாது. என கூறியிருக்கும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் கூறியிருக்கின்றார்.
அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் கொரோனா கோர தாண்டவமாடும் நிலையில் இலங்கையில் அச்சுறுத்தல் இல்லை என கூற முடியாது.
காரணம் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள நாடு இந்தியா, மேலும் இந்தியாவை ஒத்ததான பாரிய அச்சுறுத்தலுக்கான சாத்தியங்கள் இலங்கையில் தற்போது காணப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றார்.