பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!! -பதிவிட்ட வீடியோக்களை அகற்றவும் அறிவுறுத்தல்-
இந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டிலும் சீனாவின் டிக்டாக் செயலியை பயன்படுத்த நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது.
ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளை அடுதது சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை, முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தான் நாட்டிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.